இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நான்காவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்ற மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தம்பலகாமம் பிரதேச சபையின் சார்பாக தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி தெரிவித்துள்ளார்.
தம்பலகாமம் பிரதேச சபையின் பத்தாவது சபை அமர்வு இன்று (11) சபையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது இதன் போது உரையாற்றும் போதே இவ்வாறு பிரதமருக்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
மூவின மக்களின் ஆதரவால் தெரிவாகிய பிரதமர் தலைமையிலான ஜனாதிபதி பிரதேச அபிவிருத்திகளை தொடர்ந்தும் எமது மக்களுக்கும் சென்றடையக் கூடியவாறு வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்காக சகல உறுப்பினர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் மக்களுடைய தேவை நலன்களை கொண்டு சபை நடவடிக்கைகளை முன் கொண்டு செல்ல வேண்டும் ஏதாவது முரண்பாடுகள் இருக்குமாயின் தன்னை சந்தித்து தீர்க்கமான முடிவுகளோடு எதிர்கால அபிவிருத்திகளுக்காக செயற்பட உறுதுனையாக யாவரும் கைகோர்க்க வேண்டும். அனைவரும் சமமான முறையில் இந்த சபையில் வழி நடாத்தப்படுவதே எமது எதிர்பார்ப்பாகும் மக்களுடைய வரிப் பணத்தை பெற்று கொள்கின்ற சபை அவர்களுக்கான தீர்வுகளை முன்வைக்கவும் முயற்சிக்க வேண்டும் இதற்காக சக உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்புக்களும் அவசியம் .
நாட்டுக்கு புதிய பிரதமராக தெரிவாகிய கௌரவ மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன் என்றார்.