ஐபிஎல் 2020 சீசன் கடந்த மாதம் 29 ஆம் திகதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் முதல் வாரத்திலேயே ஏப்ரல் 15 ஆம் திகதி வரை தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் இந்தியாவில் மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதனால் ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ, ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளிடம் தெரிவித்து விட்டதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.