கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் 24ஆம் திகதியிருந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்றவைகளுக்காக வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பொதுமக்கள் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல் வீதியில் உலா வருகின்றனர். இதனால் விதிமுறையை மீறும் நபர்கள் மீது அபராதம் விதிக்கின்றனர். மேலும் வெளியே செல்ல வேண்டும் என்றால் அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு வாங்குவது அவசியம்.

இமாச்சல பிரதேசத்தில் இந்திய அணிக்காக விளையாடிய ரிஷி தவான் தனது வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது பொலிஸார் அவரது வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அனுமதி சீட்டு வாங்கவில்லை என்று தெரியவந்தது.

இதனால் பொலிஸார் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரிஷி தவான் ஐபிஎல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடிள்ளார்.

இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.