கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. பிரபல நடிகர்-நடிகைகளும் இந்த வைரசில் சிக்கி பலியாகிறார்கள். ஏற்கனவே ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, அமெரிக்க பாடகர் ஜோ.டிப்பி, இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ் ஆகியோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தற்போது இன்னொரு நடிகையும் பலியாகி இருக்கிறார். அவரது பெயர் பேட்ரிசியா பாஸ்வொர்த். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் அதிகமானதால் பரிசோதனை செய்தனர். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பேட்ரிசியா பாஸ்வொர்த் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. இவர் பிரபல எழுத்தாளரும் ஆவார்.